அருண் ஜெட்லியின் அலைபேசி ஒட்டுக்கேட்பு!

184

மத்திய முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் அலைபேசி ஒட்டுகேட்கப்பட்ட விவகாரத்தில் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்குமாறு பார்லிமென்ட் குழு அறிவுறுத்தியுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு முதல் முறையாக, 2014ல், மத்தியில் ஆட்சியை கைப்பற்றியது. அதற்கு ஓராண்டுக்கு முன்பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான அருண் ஜெட்லியின் அலைபேசிகள் அழைப்புகள் ஒட்டு கேட்கப்பட்டதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்திய அப்போதைய பார்லிமென்ட் குழு அருண் ஜெட்லியின் போன் ஒட்டு கேட்கப்பட்டதில் உரிமை மீறல் எதுவும் இல்லை என குறிப்பிட்டது. அதையடுத்து பா.ஜ., – எம்.பி.,க்கள் பார்லியில் ரகளையில் ஈடுபட்டதை அடுத்து புதிய குழு விசாரணை நடத்தியது.

அதன் விசாரணை அறிக்கை பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: அருண் ஜெட்லியின் செயல்பாட்டிற்கு பாதகம் ஏற்படுத்தும் வகையில், அவரின் அலைபேசி ஒட்டு கேட்கப்பட்டுள்ளது.

அது அப்பட்டமான உரிமை மீறல். இந்த விவகாரம் குறித்து டில்லி போலீஸ் நியாயமாக விசாதரணை நடத்தி, அந்த குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் அந்த தகவலை பார்லிமென்டிற்கு தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of