சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜய்!! சிங்கம் பட இயக்குநரின் அதிரடி முடிவு..

2861

இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் ”அருண் விஜய் 33” படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. இயக்குநர் ஹரியின் இயக்கத்தில், சாமி, கோவில், அருள், ஐயா, ஆறு, தாமிரபரணி, சிங்கம், வேங்கை என பட படங்கள் வெளியாகியுள்ளன. விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ், விஷால், சரத்குமார் என பல நடிகர்களுடன் இயக்குநராக பணியாற்றியுள்ள ஹரி இதுவரை தனது மனைவியின் அண்ணனும் நடிகருமான அருண் விஜய்யுடன் பணியாற்றியது இல்லை. இருவரும் எப்போது இணைவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்துவந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.

அருவா படத்தை ஞானவேல் ராஜா தயாரிப்பில் சூர்யாவை வைத்து ஹரி இயக்குவதாக இருந்தது. இந்த நிலையில், சூரரைப் போற்று படத்தை ஓடிடியில் வெளியிட ஹரி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதனால் சூர்யாவுக்கும் ஹரிக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால் ’அருவா’ படத்தை அருண் விஜய்யை வைத்து ஹரி இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இப்படத்தில், அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மார்ச் மாதம் தொடங்கி ஆகஸ்டில் வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு.

இந்நிலையில், இன்று இயக்குநர் ஹரி ,அருண் விஜய், விஜயகுமார், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் பூஜையில் கலந்துகொண்டு படப்பிடிப்பை துவங்கியுள்ளனர்.

Advertisement