தூத்துக்குடி துப்பாக்கி சூடு : அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் விசாரணை நேற்றுடன் நிறைவு

839

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் 4ஆம் கட்ட விசாரணையை நிறைவு செய்துள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த ஆணையம் 4ஆம் கட்ட விசாரணையை நேற்று நிறைவு செய்தது.

அடுத்த கட்ட விசாரணை அடுத்த மாதம் 22ஆம் தேதி முதல் தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தவர்கள், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் என இதுவரை 49 பேர் ஆணையத்தின் முன்பு ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளனர்.

Advertisement