கலைஞர் சிலை திறப்பு விழா – அரவிந்த் கெஜ்ரிவால், சரத் பவாருக்கு அழைப்பு

443

இன்று (10-12-2018) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு சரத் பவார் அவர்களை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

அப்போது, வருகிற டிசம்பர் 16-ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவிருக்கும் கலைஞர் அவர்களின் சிலை திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை கழகத் தலைவர் அவர்கள் வழங்கினார்.

மேலும், கருணாநிதி சிலை திறப்பு விழா அழைப்பிதழை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கி விழாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்