கெஜ்ரிவால் கவனத்தை ஈர்க்கத் தவறிய குட்டி கெஜ்ரிவால்

152

அரவிந்த் கேஜரிவால் போன்று உடை அணிந்த குழந்தை, அரவிந்த் கெஜ்ரிவாலின் கவனத்தை ஈர்க்க முடியவில்லை

அரவிந்த் கெஜ்ரிவாலின் பதவியேற்பு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற குழந்தை கெஜ்ரிவால் மீண்டும் ஒரு முறை அவரது கவனத்தை ஈர்க்கத் தவறினார்.

Baby Mufflerman is invited to the swearing in ceremony of Arvind Kejriwal on 16th Feb: AAP

டெல்லி பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான கடந்த 11-ம் தேதி, ஆம் ஆத்மி தொண்டர்கள் கட்சி அலுவலகத்தில் தேர்தல் முடிவுகளைக் கொண்டாடினர். அப்போது, அரவிந்த் கேஜரிவால் போன்று உடையும், தொப்பியும் அணிந்திருந்த குழந்தை இணையத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அந்தக் குழந்தை ஆம் ஆத்மியின் ஆதரவாளர்களான ராகுல் தோமரின் ஒரு வயது மகன் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்குக் கிடைத்த வரவேற்பையடுத்து, பதவியேற்பு விழாவுக்கும் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த அறிவிப்பை ஆம் ஆத்மி கட்டுரைப் பதிவில் வெளியிட்டது. இதையடுத்து, ஆவ்யன் தோமர் மீண்டும் கேஜரிவால் போல் வேடமணிந்து நேற்று பதவியேற்பு விழாவிலும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். ஆம் ஆத்மி தலைவர்களான ராகவ் சத்தா மற்றும் சோம்நாத் பாரதி போன்றவர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.  இருப்பினும் இந்த முறையும் அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஆவ்யன் தோமரால் அரவிந்த் கெஜ்ரிவாலின் கவனத்தை ஈர்க்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of