தமிழக மாணவர்களுக்கு எதிராக பேசிய அரவிந்த் கெஜ்ரிவால்! தேர்தல் ஆணையத்தில் மாணவர்கள் புகார்!

580

ஆம் ஆத்மி கட்சித்தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தமிழக அரசியல் தலைவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர். முக்கியமாக திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு மிகவும் நெருக்கமானவர்.

இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்முறையாக தமிழக மாணவர்களுக்கு எதிராக பேசி இருக்கிறார். இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசிய ஆடியோ கால் ஒன்று தேர்தலை ஒட்டி டெல்லி மக்களுக்கு சென்றது.

தேர்தல் பிரச்சாரத்திற்காக கெஜ்ரிவால் ஆடியோவில் பேசி இருந்தார். அதில், டெல்லியில் பிற மாநில மக்களின் ஆதிக்கம் அதிகம் ஆக்கிவிட்டது. டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழர்கள் அதிகம் படிக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு வேலை கிடைக்கிறது.

இதனால் டெல்லி வாசிகளின் வாய்ப்புகள் பறிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டார். இதுகுறித்து டெல்லி பல்கலைகழகத்தில் படிக்கும் தமிழக மாணவர்கள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர். மக்களிடையே பிரிவினையை தூண்டி வாக்கு கேட்கிறார் கெஜ்ரிவால் என்று புகார் அளித்துள்ளனர். இந்த புகார் குறித்து விசாரிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து இருக்கிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of