காங்கிரஸ் டெல்லியில் கண்டிப்பாக தோற்கும்! கூட்டணி கட்சி தலைவர் உறுதி?

532

டெல்லியில் முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

“ஆம் ஆத்மிக்கு காங்கிரசுடன் கூட்டணி சேர வேண்டும் என்ற கனவு இல்லை, ஆனால் நாட்டை காப்பாற்றவே கூட்டணிக்கு ஒப்புக்கொண்டோம். கூட்டணி அமைக்க எங்களால் முடிந்த அளவு முயற்சி செய்தோம். ஒருவேளை பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஒரே ஒரு நபர் தான் அதற்கு பொறுப்பாக இருக்க முடியும், அது ராகுல் காந்தி தான்.

தான் இறுதிவரை ஆம் ஆத்மியுடன் கூட்டணிக்கு முயற்சித்ததாக ராகுல் காந்தி கூறுவது, அவரது மனப்பாங்கு. அவர்களுக்கு அப்படி ஒரு எண்ணமே இல்லை.
காங்கிரஸ் கட்சியால் டெல்லியில் வெற்றிபெற முடியாது. காங்கிரஸ் டெல்லியில் வெற்றி பெறும் நிலையில் இருந்தால், நான் அனைத்து (7) தொகுதிகளையும் காங்கிரசுக்கு வழங்க தயாராக இருக்கிறேன்.

ஆம் ஆத்மி – காங்கிரஸ் கூட்டணிக்கு 4:3 தொகுதிகள் என்பது, பா.ஜனதாவுடன் கூட்டணி சேருவது போன்றது தான். அதாவது காங்கிரசுக்கு கொடுக்கும் 3 தொகுதிகளும் நிச்சயம் தோற்று தான் போகும். பா.ஜனதாவுக்கு 3 தொகுதிகளை கொடுக்க எனது மனசாட்சி அனுமதிக்கவில்லை.

கேரளா, அரியானா, கோவா, மேற்குவங்காளம், உத்தரபிரதேசம் போன்ற பல்வேறு மாநிலங்களில் எதிர்க்கட்சிகளை காங்கிரஸ் வலுவிழக்கச் செய்துள்ளது. நாட்டை காப்பாற்ற விரும்பும் அனைத்து மதத்தினரும் ஒருங்கிணந்து ஆம் ஆத்மிக்கு ஓட்டு போடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of