“ஒரே மாதிரி இருக்காங்களேப்பா..” தலைவி படத்திற்காக எம்.ஜி.ஆர். வேடத்தில் மாறிய அரவிந்த்சாமி..! வைரலாகும் புகைப்படம்..!

814

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை எடுக்க, இரண்டு இயக்குநர்கள் மும்மரமாக இறங்கி உள்ளனர்.

இதில், இயக்குநர் ஏ.எல்.விஜய் தலைவி என்ற பெயரில் திரைப்படமாகவும், கௌதம் வாசுதேவ் மேனன் தி குயீன் என்ற பெயரில் வெப் சீரிசாகவும் எடுக்க முயன்று வருகின்றனர்.

இதில், தலைவி படத்தில் நடிக்க, ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனவாத்தும், எம்.ஜி.ஆர் வேடத்தில் நடிக்க அரவிந்த்சாமியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

படபிடிப்புக்கான வேலைகள் மும்மரமாக நடந்து வரும் நிலையில், தற்போது அரவிந்த்சாமியின் புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது. அதில், மீசைகளின்றி காணப்படும் அரவிந்த்சாமி, எம்.ஜி.ஆர் போலவே இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.