என்.எஸ்.இ தலைவர் அசோக் சாவ்லா ராஜினாமா

242

தேசிய பங்கு சந்தை தலைவர் அசோக் சாவ்லா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமாவுக்கான காரணங்களை அவர் வெளியிடவில்லை.

என்.எஸ்.இ. எனப்படும் தேசிய பங்குச் சந்தையின் தலைவராக கடந்த 2016ஆம் ஆண்டு அசோக் சாவ்லா நியமிக்கப்பட்டார். ஏர்செல் – மேக்சிஸ் நிறுவனங்களுக்கிடையே நடந்த பண பரிவர்த்தனையில் மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான குழுவின் அனுமதி பெறாமல் நடந்ததாக குற்றச்சாட்டு உள்ளது.

இதுதொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி ஆகியோர் மீதான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, என்.எஸ்.இ.யை விசாரிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக சி.பி.ஐ. தெரிவித்தது.

இந்த விவகாரம் காரணமாகவே அசோக் சாவ்லா பதவி விலகி இருக்கலாம் என கூறப்படுகிறது.