“Asia Book of Records ?” – பார்த்திபனின் ஒத்த செருப்பு சைஸ் 7 | Parthiban

903

இரா. பார்த்திபன் ! பல இயக்குனர்கள் தங்களது படைப்புகளை வெளிப்படுத்திய நேரத்தில் தனது படைப்பை “புதிய பாதையில்” கொண்டு சென்ற தனித்துவமான ஒரு இயக்குனர். தற்போது இவர் தயாரித்து, எழுதி, இயக்கி, நடித்திருக்கும் திரைப்படம் ஒத்த செருப்பு சைஸ் 7.

உலக அளவில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே இடம்பெறும் படியாக 12 படங்கள் உண்டு. ஆனால் அந்த படங்களில் திரைக்கதை, இயக்கம், நடிப்பு என்று அனைத்தும் தனி தனி நபர்களால் மேற்கொள்ளப்பட்டது ஆனால் ஒத்த செருப்பு திரைப்படத்தில் இத்தனை துறைகளையும் பார்த்திபன் அவரே கையாண்டதால், மற்ற திரைப்படங்களை தாண்டி ஒரு தனி சிறப்பை இந்த படம் பெற்றிருக்கிறது.

parthiban

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பார்த்திபன் அவர்களோடு இணைந்து கதை திரைக்கதை வசனம் இயக்கம் மற்றும் கோடிட்ட இடங்களை நிரப்புக படங்களில் பணியாற்றிய இரா. சுதர்சன் இந்த படத்தின் படத்தொகுப்பை கவனிக்கும் நிலையில், ஆஸ்கர் விருது வென்ற ரசூல் பூக்குட்டி கலை இயக்குநராகவும், அம்ரித் ப்ரீத்தம் சவுண்ட் டிசைனராகவும் பணியாற்றியுள்ளனர். பாடல்களை விவேகா எழுதியிருக்கிறார்.