ஆசிய பேட்மிண்டன்: 54 ஆண்டுகால ஏக்கத்தை தணிப்பார்களா சாய்னா, சிந்து?

334

39-வது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் யுஹான் நகரில் நேற்று தொடங்கியது. வருகிற 28-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் சாய்னா நேவால், பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த், சமீர் வர்மா உள்ளிட்ட இந்தியர்கள் பங்கேற்றுள்ளனர்.

ஆசிய பேட்மிண்டன் போட்டியில் 1965-ம் ஆண்டில் இந்தியாவின் தினேஷ் கண்ணா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். அதன் பிறகு இந்தியர்கள் யாரும் இங்கு மகுடம் சூடியதில்லை. 54 ஆண்டுகால அந்த ஏக்கத்தை சாய்னா, சிந்து தணிப்பார்களா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

இந்த போட்டியில் 3 முறை வெண்கலப்பதக்கம் வென்றுள்ள சாய்னா தனது முதல் சுற்றில் ஹான் யுவை (சீனா) இன்று சந்திக்கிறார். பி.வி.சிந்து முதல் சவாலை சயாகா தகாஹஷியுடன் (ஜப்பான்) தொடங்குகிறார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of