ஆசியன் சிலம்ப விளையாட்டு போட்டி கோவை மாணவி சாதனை

1288

மலேசியாவில் நடைபெற்ற ஆசியன் சிலம்ப விளையாட்டு போட்டியில் கோவை மாணவி நிவேதா 2 தங்கப் பதக்கம் உள்ளிட்ட 4 பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளார்.

ஆசிய அளவிலான முதலாவது சிலம்ப விளையாட்டு போட்டிகள் கடந்த 29 மற்றும் 30ம் தேதிகளில் மலேசியா நாட்டின் கோலாலம்பூரில் நடைபெற்றது.

இதில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, மலேசியா, இலங்கை, கனடா உள்ளிட்ட 7 நாடுகளை சேர்ந்த 200 பெண்கள் உள்ளிட்ட 350 பேர் கலந்து கொண்டனர்.

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த 70 பேர் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியில்  கோவையை சேர்ந்த நிவேதா என்ற மாணவி சுருள் வீச்சு பிரிவில் தங்கம், நெடுங்கம்பு பிரிவில் வெள்ளி, நடுங்கம்பு பிரிவில் வெண்கலம் ஆகிய மூன்று பதகங்களையும் மகளிருக்கான ஒட்டு மொத்த பிரிவில் தங்கப் பதக்கத்தையும் வென்று சாதனை படைத்துள்ளார்.

இதேப்போல் ஆடவருக்கான பிரிவில் கோவையை சேர்ந்த சுதர்ஷன் என்பவர் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்திற்கு மற்ற விளையாட்ட போட்டிகளுக்கு கிடைப்பதை போல் ஊக்கத்தொகை கிடைப்பதில்லை என்றும் அரசு நிதி உதவி செய்தால், பாரம்பரிய சிலம்ப கலை மேலும் வளர்ச்சி பெறும் என வெற்றி பெற்ற நிவேதா மற்றும் சுதர்சன் ஆகியோர் தெரிவித்தனர்.

 

Advertisement