பீகாரை தொடர்ந்து அசாமை மிரட்டும் மூளைக்காய்ச்சல்..! – 20 பேர் பலி…!

250

பீகாரை தொடர்ந்து அசாமிலும் மூளைக் காய்ச்சல் நோய்க்கு 20 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

பீகாரில் மூளைக்காய்ச்சலுக்கு இதுவரை 133 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இதில் முஷாபர்நகர் ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மட்டும் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தன. முஷாபர்நகர் மருத்துவமனையில் மேலும் 290 குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் பீகாரை தொடர்ந்து அசாமிலும் மூளைக் காய்ச்சல் நோய் பரவியுள்ளது. ஜோர்ஹாட், திப்ரூகார் ஆகிய மாவட்டங்களில் 20 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து அசாம் மாநிலத்திலும் தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of