2 ஆயிரம் திருநங்கைகளுக்கு ஒரே நேரத்தில் இழைக்கப்பட்ட அநீதி..! உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்..!

342

அசாமில் அண்மையில் வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டில் 3 கோடி மக்களின் பெயர் இடம்பெற்றிருந்த நிலையில், 19 லட்சம் பேரின் பெயர் இடம்பெறவில்லை. விடுபட்டவர்கள் வெளிநாட்டவருக்கான தீர்ப்பாயத்தில் முறையீடு செய்யலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2 ஆயிரம் திருநங்கைகளின் பெயர்களும் விடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெறாத 2 ஆயிரம் திருநங்கைகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அசாம் மாநிலத்தின் முதல் திருநங்கை நீதிபதியும் இந்த வழக்கின் மனுதாரருமான ஸ்வாதி பிதான் பருவா இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

குடிமக்கள் பதிவேட்டில் பெரும்பாலான திருநங்கைகள் பெயர் இடம்பெறவில்லை என்றும், 1971 ஆண்டுக்கு முந்தைய ஆவணங்கள் அவர்களிடம் இல்லை என்றும் அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும் தேசிய குடிமக்கள் பட்டியலில் மூன்றாம் பாலினத்தவரை சுட்டிக்காட்ட தனியாக இடம் ஏதும் இல்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், அவர்கள் ஆண் அல்லது பெண் என்ற இருபாலினங்களையே தேர்வு செய்யும் வகையில் பட்டியல் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், தெரிவித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of