எந்த மாநில பெண்கள் அதிகம் மது அருந்துகிறார்கள் தெரியுமா..?

5640

மது விலக்கு கொண்டு வரவேண்டும் என்று ஒரு புறம் பெண்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இன்னொரு புறம் சில பெண்கள் போதையில் தள்ளாடி வருகின்றனர். இது பெண்களின் உரிமை என்று சில பெண்ணியவாதிகள் கூறினாலும், யார் குடித்தாலும் அது தவறு என்பது தான் பலரது கருத்தாக உள்ளது.

இந்நிலையில், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அதிகபட்சமாக அஸ்ஸாம், மாநிலத்தில், 15 வயதில் இருந்து 49 வயதிற்குட்பட்ட பெண்கள், 26 சதவீதம் பேர் மது அருந்துகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மேற்கு வங்க மாநிலத்தில், அதிகபட்சமாக 59 சதவீதம் பேர் புகையிலையை பயன்படுத்துகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரையில், 0.2 சதவீத பெண்கள் மது அருந்துவதாகவும், 5.8 சதவீத பெண்கள் புகையிலை பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அளவில் பார்க்கும்போது, 1.2 சதவீத பெண்கள் மது அருந்துபவர்களாவும், 6.8 சதவீத பெண்கள் புகையிலை பயன்படுத்துபவர்களாகவும் உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

Advertisement