‘வாவ் அமேசிங்..,’ தெலுங்கு படத்தில் நடிக்கும் துணை முதல்வர்..!

275

தெலுங்கில் அம்ருதா பூமி என்ற திரைப்படம் தயாராகி வருகிறது. பருக்ருதி ஆதி தேவா பாவா நிறுவனம் சார்பில் தயாராகி வரும் இந்த திரைப்படம், இயற்கை விவசாயத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து உருவாகி வருகிறது.

இயற்கை விவசாயம் தான் கதையின் கரு என்று கூறப்படுகிறது. ஏபி ஆனந்த் என்பவர் இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் ஆந்திராவின் துணை முதல்வர் பி. புஷ்பா ஸ்ரீவாணி டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்ரீவாணி பேசும்போது, மக்களுக்கு இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இந்த படத்தில் நடித்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். இதனால் பல்வேறு தரப்பினர் பி. புஷ்பா ஸ்ரீவாணியை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of