“அடிக்கடி தொல்லை.. இந்த முறை எல்லை மீறிட்டார்..” துணை பேராசிரியர் கொடுத்த பரபரப்பு புகார்..!

881

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் அண்ணா பல்கலைக்கழக வளாகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் துணை பேராசிரியராக பணிபுரிபவர் ஹேமா. இவருக்கு, அந்த பள்ளியை சேர்ந்த பொறுப்பு முதல்வர் துரை ராசன் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இவரின் இந்த பாலியல் தொல்லை எல்லை மீறியதையடுத்து, ஹேமா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், துரைராசன் தன்னிடம் பேசிய ஆடியோ ஆதாரங்களையும் போலீசில் ஒப்படைத்தார்.

 

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தகவல் தெரியவந்ததையடுத்து, அந்த பல்கலைகழகத்தின் ஒரு தரப்பு மாணவர்கள் மட்டும், துரைராசனுக்கு ஆதரவு குரல் கொடுத்துள்ளனர்.

இதில் யார் பக்கம் உண்மை உள்ளது என்று தீவிர விசாரணைக்கு பிறகே தெரிய வரும். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.