அசுரன் பட கதாநாயகி..! இயக்குநர் மீது பகீர் புகார்..! அதிர்ச்சியில் திரையுலகம்..!

1353

கலைப்புலி எஸ்.தானு தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடித்த திரைப்படம் அசுரன். இந்த திரைப்படத்தில் கதாநயாகியாக நடித்தவர் மஞ்சு வாரியர். மலையாள சினிமாவில் உள்ள முன்னணி நடிகைகளில் இவரும் ஒருவர்.

இந்நிலையில் இவர் பிரபல தயாரிப்பாளரும், இயக்குநருமான ஸ்ரீகுமார் மேனன் மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகாரின்படி, ஸ்ரீகுமார் மேனன் தனது உயிருக்கு ஆபத்து மற்றும் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், நிதி பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும் சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்புவதாக மஞ்சு வாரியர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், திரைப்படத்தின் தயாரிப்பு மற்றும் வெளியீட்டின் பல்வேறு கட்டங்களில் ஸ்ரீகுமார் மேனன் தன்னை வாய்மொழியாக துஷ்பிரயோகம் செய்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மஞ்சு வாரியரின் இந்த புகார் மலையாள திரையுலகில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இந்த புகார் குறித்து அறிந்த ஸ்ரீ-குமார் மேனன், தனது பேஸ்புக் பக்கத்தில் மஞ்சு வாரியருக்கு பதிலடி கொடுத்துள்ளார். மேலும், இந்த குற்றச்சாட்டு மீதான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை அளிப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.