ஆளுநர் மாளிகையில் முக்கிய பிரமுகர்களுக்கு தேநீர் விருந்து வழங்கிய ஆளுநர் பன்வாரிலால்

403

குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் முக்கிய பிரமுகர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் தேநீர் விருந்து வழங்கினார்இந்த தேநீர் விருந்தில் சபாநாயகர் தனபால், முதலமைச்சர் பழனிச்சாமி, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பல்வேறு துறையை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் இந்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டனர்.

இதேபோன்று குடியரசு தினத்தையொட்டி புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அளித்த தேநீர் விருந்தில் அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே அங்கு இருந்த முதலமைச்சர் எதுவும் சாப்பிடாமல் புறப்பட்டு சென்றார். இந்த தேநீர் விருந்தை காங்கிரஸ், தி.மு.க, என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க என அனைத்து எம்.எல்.ஏ-க்களும்  ஒட்டுமொத்தமாக புறக்கணித்தனர்.