“சைக்கோ” – என் திறமையை அவர்கள் நம்புவதை காட்டுகிறது | Athithu Rao

749

தமிழ் திரையுலகில் தனக்கென தனி வழியில் செல்லும் இயக்குனர்களில் மிஷ்கின் மிக முக்கியமானவர், விஷால் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான துப்பறிவாளன் திரைப்படம் அதன் இயக்கத்திற்காக வெகுவாக பாராட்டப்பட்டது.

தற்போது மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ள படம் சைக்கோ. டபுள் மீனிங் புரடக்‌‌ஷன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் இப்படத்தை தயாரித்துள்ளார். டிசம்பர் 27ந்தேதி திரைக்கு வரும் இந்த படத்தில் நித்யா மேனனுடன் இணைந்து இன்னொரு நாயகியாக நடித்துள்ளார் அதிதி ராவ்.

அதிதி அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், அனைத்து இயக்குனர்களுமே எனது குருநாதர்கள். ஏற்கனவே பணிபுரிந்த இயக்குனருடன் மீண்டும் பணிபுரிய வாய்ப்பு வரும்போது பெருமகிழ்ச்சி அடைவேன். காரணம், மீண்டும் அவர்கள் அழைக்கிறார்கள் என்றால் அவர்கள் என்னுடைய திறமையை நம்புகிறார்கள் என்று அர்த்தம். அது ஒரு அற்புதமான உணர்வு. அதுபோன்று நிகழும்போது ஆசீர்வதிக்கப்பட்டவளாக நினைத்துக் கொள்வேன் என கூறியுள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of