‘அட்லாண்டிஸ்’ தொலைந்துவிட்ட ஒரு சகாப்த்திய நகரம்

833

‘அட்லாண்டிஸ்’, வரலாற்று மர்மங்கள் அனைத்தும் ஒன்றிணைந்த ஒரு சகாப்த்திய அம்சம். காணாமல் போன இந்த புகழ்பெற்ற தீவு நகரம் பற்றிய சில கதைகளை கிரேக்க தத்துவஞானி பிளேட்டோவால் 2000 ஆண்டுகளுக்கு முன்பு தான் எழுதிய நூலில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் சிலர் நீரில் மூழ்கி காணாமல் போன அட்லாண்டிஸ் நகரம் ஒரு கட்டுக்கதை என்றும் இல்லையென்றால் அது உண்மையில் இருக்கும் நாகரிகத்தை அடிப்படையாகக் கொண்ட தொடுக்கப்பட்ட ஒரு புராணக்கதையாக இருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

இன்றைய இளம் தலைமுறை ஆராச்சியாளர்கள் இந்த மர்ம இடத்தை பற்றி அறிய ஆர்வமாக உள்ளனர். அட்லாண்டிஸ் ஒரு மாய தீவு, சுமார் 11,000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான, அதிலும் செல்வ செழிப்பு மற்றும் நவீன நாகரீகம் கொண்ட ஒன்று. கிரேக்க தத்துவஞானி பிளேட்டோ தான் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மர்ம தீவைப் பற்றி பல குறிப்புகளை எழுதிய முதல் மனிதர், சில இயற்கை பேரழிவுகள் காரணமாக அட்லாண்டிஸ் கடல்களுக்குள் மறைந்துவிட்டது என்று குறிப்பிட்டார். ஆனால் உண்மையில் இவ்வளவு பெரிய நிலப்பரப்பு மற்றும் நவீன தொழில்நுட்பம் கொண்ட ஒரு நாகரீகம் இயற்கை பேரழிவுகளில் சிக்கி ஒரு சில மணி நேரத்தில் மறைந்து போகக்கூடுமா?

பல ஆராய்ச்சிகளும் விஞ்ஞானிகளும் இந்த நகரம் ஒரு பெரிய எரிமலை வெடிப்பால் அழிக்கப்படுவதாகக் கூறுகின்றனர், அந்த எரிமலை சீற்றம் அணு வெடிப்பின் 40 மடங்குக்கு சமம் என்று குறிப்பிடுகின்றனர், மேலும் சிலர் 11,000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய வெள்ளம் அல்லது ஒரு சுனாமி இந்த முழு நாகரிகத்தையும் தண்ணீருக்கு அடியில் எடுத்துச் சென்றதாகவும் கூறுகின்றனர்.

புராணத்தின் படி, அட்லாண்டிஸ் நகரம் மிகவும் நவீனமானது மற்றும் மிகப்பெரியது. கடல், புயல் மற்றும் பூகம்பங்களின் கடவுளான போற்றப்படும் போஸிடனால் (Poseidon) உலகம் முழுதும் சுற்றிவந்ததாகவும், அவ்வாறு வரும்போது அதீத ஆற்றல் கொண்ட பல மனிதர்கள் ஒருங்கே ஒரு இடத்தில் கண்டு அங்குள்ள கிளிடோ என்ற பெண் மீது காதல் கொண்டு அந்த முழு நகரத்தையும் கட்டியெழுப்பியதாகவும் கூறப்படுகிறது. கட்டுக்கதைகளோ, பழங்கால கதைகளோ எதுவாயினும் இந்த நகரத்தை தேடும் பணி இன்றளவும் குறையவில்லை என்பது நிதர்சனம்.

Advertisement