டாப் ஹீரோவின் ஜூனியருடன் இணையும் அட்லீ..? – பரபரப்பில் சினிமா வட்டாரம்..!

745

தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து நடிகர் விஜய் உடன் மூன்று படங்களில் பணியாற்றியுள்ளார் இயக்குநர் அட்லீ. பிகில் படத்திற்கான இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர் அடுத்து ஷாருக்கான் உடன் இணைகிறார் என, சில மாதங்களுக்கு முன்பு செய்தி வந்தது. ஆனால், அது பற்றி, தற்போது வரை அதிகாரபூர்வ அறிவிப்பு வரவில்லை. இந்நிலையில், தற்போது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் ஒரு செய்தி பரவி வருகிறது.

டாப் ஹீரோவான ஜூனியர் என்.டி.ஆர்., அடுத்து அட்லீ இயக்கத்தில் நடிக்கிறார். தற்போது, அவர் ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்து வருகிறார். அதன் ஷூட்டிங் முடிந்த பின், இயக்குநர் அட்லீயுடன் படம் துவங்கும் என கூறப்படுகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of