வயசானவங்களுக்கு மட்டும் தான் குறி…! நவீனின் பகீர் செயல்..!

2784

திருவண்ணாமலை மாவட்டம் எறும்பூண்டி பகுதியை சேர்ந்த நவீன்குமார் என்பவர் ஏடிஎம்களுக்கு வரும் வயதானவர்களிடம் இருந்து நூதன முறையில் கொள்ளையடிப்பதில் கைத்தேர்ந்தவர் ஆவார்.

இவர் ஏடிஎம் மையங்கள் இருக்கும் இடங்களுக்கு சென்று, பணம் எடுக்கத் தெரியாமல் இருக்கும் முதியவர்களை நோட்டமிடுகிறார். அதுபோன்றவர்களை சந்தித்த பிறகு, அவர்களுக்கு உதவி செய்வதைப்போல், கார்டு மற்றும் பின் நம்பரை ஏமாற்றி பெற்று விடுகிறார்.

பின்னர் வேறொரு ஏடிடிம் மையங்களுக்கு சென்று பணத்தை எடுத்து வந்துள்ளார். இதுபோன்ற தொடர் திருட்டு சம்பவங்களை அவர் செய்துள்ளார். இதனால் நவீன்குமார் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், அவலூர்பேட்டையில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில், தேவிகா என்ற பெண்ணை ஏமாற்றி 15 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனதாக போலீசாருக்கு புகார் வரவும், உடனடியாக சென்று போலீசார் சோதனையிட்டனர்.

அப்போது, போலீசாரை பார்த்ததும் ஒருவர் தப்பி ஓட முயற்சிக்கவும், சுதாரித்த போலீசார், அவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அப்போதுதான் அவர் நவீன்குமார் என்பது உறுதியானது. பின்னர் அவரை கைது செய்த போலீசார், 2.25 லட்ச ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of