வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெறுகிறது – 1ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

728

வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுவதால் தமிழகத்தின் முக்கிய துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வட மேற்கு வங்கக்கடலில் 550 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுவதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆந்திரா அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெறுவதால் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும், ஆந்திர கடல்பகுதிக்கு மீன் பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் காற்றழுத்த பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெறுவதால் சென்னை, கடலூர், நாகை புதுச்சேரி, ஆகிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை என்றும் கடல் சீற்றத்துடன் காணப்படும் எனவும் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement