நட்சத்திர ஓட்டலில் தாக்குதல் ! 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

445

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் அருகில் உள்ள குவாதர் துறைமுகத்துக்கு அருகே உள்ள 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்கு நேற்று மாலை சுமார் 4.45 மணியளவில் பயங்கர ஆயுதங்களுடன் 3 பயங்கரவாதிகள் திடீரென நுழைந்தனர்.

இதைப் பார்த்த ஓட்டல் காவலாளி அவர்களை தடுக்க முயன்றார். உடனே பயங்கரவாதிகள் அந்த காவலாளியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

அதன்பின், ஓட்டலில் தங்கியிருந்தவர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்த முயன்றனர்.

தகவலறிந்து வந்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் ஓட்டலில் நுழைந்த பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர். இந்த பயங்கரவாத சம்பவத்துக்கு பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தால் குவாதர் நகர் முழுதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.