ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏலம்.. வங்கி ஊழியர் அடித்து கொலை..!

670

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கோட்டைபட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமம் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது. இந்த கிராமத்தை சேர்ந்த  அதிமுக கிளைச்செயலாளர் ராமசுப்பு.

இவர் நேற்று ஊராட்சி தலைவர் பதவிக்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் கோட்டைபட்டி கிராமத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஊர் நாட்டாமையான சுப்புராமை அழைக்கவில்லை.

மேலும் வேட்புமனுத்தாக்கல் செய்த பின்னர் கூட்டத்தை நடத்துகின்றனர் என சுப்புராமின் தம்பி சதிஷ்குமார் கூறியுள்ளார். இதனால் ராமசுப்பு, சதீஸ்குமார் ஆகியோரிடையே மோதல் ஏற்பட்டது.

இதில் ராமசுப்பு, சுப்புராஜ், முத்துராஜ், செல்வராஜ் ஆகிய நான்கு பேரும் சதீஸ்குமாரை தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சதீஸ்குமார் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

இதனையடுத்து அங்கு வந்த ஏழாயிரம்பண்ணை போலீசார் சதீஸ்குமாரின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைகாக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து ஏழாயிரம்பண்ணை போலீஸார்வழக்குபதிவு செய்து ராமசுப்பு, சுப்புராஜ், முத்துராஜ், செல்வராஜ் உள்பட 5பேரை கைது செய்துள்ளனர்.

Advertisement