“70 சதவீத பெண்கள்..,” – துக்ளக் பத்திரிக்கை ஆசிரியரின் சர்ச்சைப் பேச்சு..!

649

சென்னை மயிலாப்பூர் அருகே தனியார் மருத்துவ அமைப்பு ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் சார்பில் பெண்கள் தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது. இதில் துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியர் குருமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், ஆங்கிலமும், நகர வாழ்க்கையும் நாட்டின் பாரம்பரிய கலாசாரத்தையே சீரழித்துக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார்.

மேலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆண்களை விட பெண்களே அதிக முக்கியத்துவத்தை அளிக்கிறார்கள் என்றும், ஆனால் பெண்கள் முன்பு போல் இல்லாததால் பல சமூக மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளது என்றும் தெரிவித்தார்.

தற்போதைய காலகட்டத்தில் 30 சதவிகித பெண்களே பெண்மையுடன் இருக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார். இவரின் இந்த சர்ச்சைப்பேச்சை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of