இந்தியாவில் ஆக.15 முதல் கொரோனா தடுப்பு மருந்து..?

143

ஜைடஸ் கடிலா என்ற நிறுவனமும் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை கண்டறியும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனத்தின் தயாரிப்பு மருந்துக்கும் மனிதர்களிடையே முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகளை  தொடங்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி கொடுத்துள்ளது.

அடுத்த மாதம் 15 ஆம் தேதிக்குள், முதல் உள்நாட்டு கொரோனா  தடுப்பூசியை வெளியிட இந்தியா திட்டமிடுகிறது.

வரும் 7 ஆம் தேதி முதல் சோதனை முயற்சியாக கொரோனா மருத்து பரிசோதிக்கப்பட உள்ளதாக ஐ.சி.எம்.ஆர் தகவல் தெரிவித்துள்ளது. மருத்துவ பரிசோதனைகள் நாடு முழுவதும் 12 நிறுவனங்களில் நடைபெறுகிறது.

ஐ.சி.எம்.ஆர் இந்த நிறுவனங்களை தடுப்பூசியின் விரைவான மருத்துவ பரிசோதனைகளை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது,  மருத்துவ பரிசோதனைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகளில் தமிழகத்தில் கட்டங்கொளத்தூர் மருத்துவமனையும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of