இந்தியா-பாகிஸ்தான் கட்டுப்பாடுடன் செயல்படவேண்டும் – ஆஸ்திரேலியா

484
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றமான நிலை காணப்படுகிறது. இந்நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் என ஆஸ்திரேலியா கோரிக்கை விடுத்துள்ளது.
ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை மந்திரி மொரிசே பெய்னே வெளியிட்டுள்ள அறிக்கையில் இருதரப்பும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்றுதான் ஆஸ்திரேலியா வலியுறுத்துகிறது. பிரச்சினையை அமைதியான முறையில் தீர்க்க இருதரப்பும் பேச்சுவார்த்தைக்கு முன்வரவேண்டும் என்பதே எங்களுடைய வலியுறுத்தலாகும்.
புல்வாமா தாக்குதலுக்கு ஆஸ்திரேலியா ஏற்கனவே கண்டனம் தெரிவித்துள்ளது.
இத்தாக்குதலை அடுத்து இருதரப்பு இடையிலான மோதல் போக்கு கவலையளிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of