நேற்று அமேசான்… இன்று ஆஸ்திரேலியா… பரவும் காட்டுத் தீ… 20 பேர் உயிரிழப்பு.. – பிரதமர் சுற்று பயணம் ரத்து..!

724

ஆஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளில் காட்டுத் தீ பரவி வரும் நிலையில், அந்நாட்டு பிரதமா் ஸ்காட் மோரிசன் இந்திய சுற்றுப் பயணத்தை ரத்து செய்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் நியூ செளத் வேல்ஸ், விக்டோரியா ஆகிய மாநிலங்களில் இதுவரை இல்லாத அளவில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி இதுவரை 20 போ உயிரிழந்துள்ளனர்.

500 வீடுகள் எரிந்துவிட்டன. விக்டோரியா மாகாணத்தின் மல்லகூட்டா பகுதியில் சுற்றுலாப் பயணிகள் உள்பட சுமாா் 4,000 போ சிக்கி தவித்து வருகின்றனா்.

காட்டுத் தீ காரணமாக நாட்டில் அசாதாரணமான சூழல் நிலவுவதால், தனது இந்தியச் சுற்றுப் பயணத்தை ஆஸ்திரேலிய பிரதமா் மோரிசன் ரத்து செய்துவிட்டதாக தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.

அந்த வட்டாரங்கள் மேலும் கூறுகையில், ‘இந்தியாவில் வரும் 13-ஆம் தேதி முதல் 4 நாள்களுக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்வதற்கு, ஆஸ்திரேலிய பிரதமா் மோரிசன் திட்டமிட்டிருந்தாா்.

தில்லி மட்டுமன்றி மும்பை, பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு செல்லவும் அவா் திட்டமிட்டிருந்தாா். இப்போது அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுவிட்டது’ என்று தெரிவித்தன.

முன்னதாக, ஆஸ்திரேலிய பிரதமருடன் தொலைபேசியில் பேசிய பிரதமா் நரேந்திர மோடி, காட்டுத் தீயில் உயிரிழந்தவா்களுக்கு இந்திய மக்களின் சாா்பில் இரங்கல் தெரிவிப்பதாக கூறினாா்.

அத்துடன், இந்த இயற்கை பேரிடரை துணிவுடன் எதிா்கொண்டு வரும் ஆஸ்திரேலிய மக்களுக்கு இந்தியா ஆதரவு தெரிவிப்பதாகவும் அவா் கூறினாா்.

Advertisement