ஆஸ்திரேலியா பெரிய அணி இல்லை.. இந்தியா தான் டார்கெட்.. முன்னாள் கிரிக்கெட் வீரர் தடாலடி..

1484

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே, டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில், வரலாறு காணாத அளவிற்கு, இந்திய அணி வெற்றி பெற்றது. இதற்கு, பலரும் தங்களது வாழ்த்துக்களை இந்திய அணிக்கு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கிரீம் ஸ்வான் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில், இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகள் விளையாட இருக்கும் ஆஷஸ் தொடரை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதில் இருந்து நான் விலக வேண்டும். தற்போது இந்திய அணியை இந்திய மண்ணில் வீழ்த்துவதுதான் மிகப்பெரிய விஷயமாக இருக்கும் என நான் நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அதாவது, ஆஸ்திரேலிய அணி சிறந்த அணி கிடையாது என்றும், இந்தியாவை வீழ்த்துவது தான் தங்களது அடுத்த இலக்கு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement