இந்திய அணி தடுமாற்றம், பேட்டிங் சொதப்பல்-250/9

392

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது இந்தியா ஆனால் ஆஸ்திரேலியவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் தினறனிர்.

தொடக்க வீரர்களாக ராகுல் – முரளி விஜய் களமிறங்கினர், ராகுல் 2 ரன்களிலும், விஜய் 11 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். கேப்டன் விராத் கோலி 3 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். மற்ற வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர்.

புஜாரா சதம் – அனைவரும் சொதப்பிய நிலையிலும் புஜாரா மட்டும் பொறுப்பாக விளையாடி 123 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். ஆட்டநேரமுடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் பும்ரா மற்றும் ஷமி உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of