இந்திய பந்து வீச்சை சூறையாடிய ஆஸ்திரேலியா.., தொடரை வெல்லுமா இந்தியா?

474

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் 2 ஆட்டங்களில் இந்தியாவும், 3 வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன.

தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4 வது ஒரு நாள் போட்டி மொகாலியில் நேற்று நடைபெற்றது.

இந்தப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலிய அணியை பந்து வீசுமாறு பணித்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் எடுத்தது.

இந்திய தரப்பில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 143 ரன்களும் , ரோகித் சர்மா 95 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ் 5 விக்கெட்களும், ஜெய ரிச்சர்டுசன் 3 விக்கெட்களும் விழ்த்தினர்.இதனை தொடர்ந்து 359 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி முதல் இந்திய பந்து வீச்சை கண்டு சற்று தடுமாறினர். பின்பு படிப்படியாக தங்களின் அதிரடி ரன் மழையை பொழிய தொடங்கினர். இதில் 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எளிதில் எட்டியது.

ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் 117 ரன்களும், உஸ்மான் கவாஜா 91 ரன்களும், ஆஸ்தன் டர்னர் 84 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்கள் விழ்த்தினார்.இதன்மூலம் இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. இதனால், கடைசி ஒரு நாள் போட்டியை வெல்லும் முனைப்பில் இரு அணிகளும் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் கடைசி போட்டி ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of