“3.40 கோடி ரூபாய்..” உயர்ந்தவன் என்பதை நிரூபித்த குவாடன்..! சிறுவனின் நெகிழ்ச்சி செயல்..!

475

ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த குவாடன் என்ற சிறுவனுக்கு பிறவியிலேயே அகான்ட்ரோபலாசியா எனும் நோய் இருந்து வந்துள்ளது. இதனால் சிறுவன் மிகவும் குள்ளமாக காணப்படுவதால், சக மாணவர்கள் அவனை கோலிக்குள்ளாக்கினர்.

மனஉளைச்சலுக்கு ஆளான அந்த சிறுவன், தற்கொலை செய்துக்கொள்ள முடிவு செய்து, தனது தாயிடமே கயிறு கேட்ட வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, பொதுமக்கள் உட்பட பல்வேறு பிரபலங்கள் அச்சிறுவனுக்கு ஆறுதல் கூறியதோடு, 3.40 கோடி ரூபாய் அன்பளிப்பும் அளித்திருந்தனர்.

இந்நிலையில் தனக்கு கிடைத்திருந்த நிதியை, அறக்கட்டளை ஒன்றிற்கு அச்சிறுவன் அளித்துள்ளான். இதன்மூலம் அனைவரையும் விட, தான் உள்ளத்தால் உயர்ந்தவன் என்று குவாடன் நிரூபித்துள்ளான்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of