நாடாளுமன்ற உறுப்பினரை முட்டையால் தாக்கிய சிறுவன்! வைரலாகும் வீடியோ!

135

கடந்த சில நாட்களுக்கு முன்பு, நியுசிலாந்த் நாட்டில் உள்ள மசூதி ஒன்றில் தீவிரவாதி ஒருவன் துப்பாக்கிச்சூடு நடத்தினான்.

இந்த தாக்குதலில், 40-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து, ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் பிரேசர் அன்னிங் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், தாக்குதலுக்கு இஸ்லாமியர்களின் குடியேற்றமே காரணம் என்று தெரிவித்தார்.

அப்போது அவர் அருகே நின்று கொண்டிருந்த சிறுவன், பிரேசர் தலையில் திடீரென முட்டை எடுத்து ஓங்கி அடித்தான்.

இதனால் கோபமடைந்த பிரேசர், அச்சிறுவனைத் தாக்கினார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.