ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி!

439

ஆஸ்திரேலியாக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி : 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

இந்திய அணி முதல் இன்னிங்சில் 250 ரன்கள் எடுத்த நிலையில், ஆஸ்திரேலிய அணி 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் 307 ரன்கள் குவித்த இந்திய அணி, ஆஸ்திரேலிய அணிக்கு 323 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. இந்திய அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி தடுமாறியது.

4 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி இன்று 5வதுநாள் ஆட்டத்தை தொடர்ந்தது. இந்திய அணி சிறப்பான பந்துவீச்சால் சீரான இடைவெளியில் ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்கள் வீழ்ந்தன.

இளம் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்தின் பங்களிப்பு அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்தது. ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை இஷாந்த் சர்மா, பும்ரா, அஸ்வின் ஆகியோர் தமது துல்லியமான பந்து வீச்சால் திணறடித்தனர்

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 6 கேட்ச், இரண்டாம் இன்னிங்சில் 5 கேட்ச் என 11 கேட்ச் பிடித்து சாதனை படைத்துள்ளார் ரிஷப் பந்த். இதன்மூலம் ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக கேட்ச் என்ற உலக சாதனையை சமன் செய்துள்ளார்.

ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் டெஸ்ட் போட்டியை வென்ற ஒரே ஆசிய கேப்டன் என்ற பெருமையை கோலி பெற்றார்.

நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி பேட்டிங்கைவிட பீல்டிங் மற்றும் பந்துவீச்சில் மிகச்சிறப்பாக செயல்பட்டது.

1995ம் ஆண்டு இங்கிலாந்தின் ஜேக் ரஸல் மற்றும் 2013ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் ஏபி டிவில்லியர்ஸ் ஆகியோர் 11 கேட்ச்கள் பிடித்து உலக சாதனைப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தனர்.

தற்போது அவர்களுடன் ரிஷப் பந்தும் இணைந்துள்ளார். இவர்களைத் தொடர்ந்து பாப் டெய்லர் (இங்கிலாந்து), கில்கிறிஸ்ட் (ஆஸ்திரேலியா), விர்திமான் சகா (இந்தியா) ஆகியோர் 10 கேட்ச்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of