ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஆட்டோ திடீரென தீப்பிடித்து எரிந்தது!

419

கொட்டிவாக்கத்தை சேர்ந்தர் வேல்முருகன். ஆட்டோ டிரைவர். இவர், நேற்று இரவு கையில் காயமடைந்த தனது மகளை சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆட்டோவில் அழைத்து வந்தார்.ஆட்டோவை புறநோயாளிகள் பிரிவு வெளிப்புறம் நிறுத்திவிட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்குள் சென்றார்.

இரவு 11 மணியவில் வேல்முருகனின் ஆட்டோ திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனை கண்ட ஆஸ்பத்திரிக்கு வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆட்டோவின் அருகே ஏராளமான மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்பட்டு இருந்தது. இதனால் பெரிய அளவில் தீவிபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.

உடனடியாக மருத்துவமனை பாதுகாவலர்களும், போலீசாரும் இணைந்து ஆட்டோவில் பற்றிய தீயை பரவாமல் அணைத்தனர். ஆட்டோ முழுவதும் எரிந்து நாசமானது.

மர்ம நபர்கள் யாரேனும் ஆட்டோவுக்கு தீ வைத்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of