ஆட்டோவின் மேலே தோட்டம்! புதுமையான ஓட்டுநர்!

513

மேற்கு வங்காளம் மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் ஆட்டோ ரிக்ஷா ஓட்டும் தொழில் செய்து வருபவர் பிஜோய் பால்.

பசுமை விரும்பியான இவர் தனது ஆட்டோவில் மரங்களை பாதுகாத்து உயிர்களை காப்பாற்றுங்கள் என்ற பொன்மொழி வாசகங்களை எழுதி வைத்துள்ளார்.

மேலும், தனது ஆட்டோ ரிக்ஷாவின் மேற்கூரையில் புல்வெளி மற்றும் அழகிய பூச்செடிகளுடன் சிறிய தோட்டம் ஒன்றையும் அமைத்து பராமரித்து வருகிறார்.

மக்களிடையே பசுமையின் தேவைக்கான விழிப்புணர்ச்சியை அதிகரிக்கும் வகையில் இவர் செய்துவரும் இந்த பிரசாரம் பலரையும் ஈர்த்துள்ளது.

இவரைப் பற்றிய தகவல் தற்போது பல சமூக ஊடங்களின் வாயிலாக செய்தியாக பரவி வருகிறது. மேலும், இவரது இந்த முயற்சிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of