வேட்பாளர்களின் திறமைகளை ஏன் சொல்வதில்லை? சேரன் வேதனை

458

பாராளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாள்களே உள்ளதால் நிலையில், அனைத்து கட்சிகளும் தங்களின் இறுதிக்கட்ட பிரசார வேலைகளில் தீவிரம காட்சிவருகின்றனர்.

ஆட்டோ கிராப் படத்தின் மூலம் மூன்று பருவத்தில் வரும் காதலை வெளிவாக காட்டி நம்மனதில் எப்போதும் தீராத காதல் வடுவை ஏற்படுத்தி என்றும் அழியாத காதல் நாயகனாக விளங்கும் ‘இயக்குநர்’ சேரன், தமிழக அரசியல் கட்சிகளின் பிரசாரம் குறித்து வேதனை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பவை,

“எல்லாரும் பேசிக்கிட்டே இருக்காங்க. யாரும் தீர்வை நோக்கி நகரவே இல்லை. பிரச்சினைகளுக்கு எந்த வகையான தீர்வுகள் சாத்தியம் என மக்களிடம் தெளிவுபடுத்தவில்லை. ஆனால், வாக்குறுதிகள் மட்டுமே இருக்கிறது அனைவரிடமும். யாரை நம்பி மாற்றம் தேடுவது. சாதாரண வாக்காளனாய் எனக்குத் தோன்றியது.

மாற்றம் தருவார்கள் என மக்கள் நம்பும், தனித்து நிற்கும் கட்சிகளான மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சித் தலைவர்கள்கூட அவர்கள் நிறுத்தியிருக்கும் வேட்பாளர்கள் பற்றிய தகவல்கள், திறமை பற்றிய விவரங்களைக் கூறாமல் தம்தம் பெருமைகளையே பேசுகிறார்கள். தொகுதியில் பங்களிக்கப்போவது வேட்பாளர்கள் தானே” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of