அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழா குழுவின் தலைவராக மாவட்ட ஆட்சியரே செயல்பட்டு அனைத்து சமூகத்தினரையும் ஒருங்கிணைத்து ஜல்லிக்கட்டை நடத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை  தெரிவித்துள்ளது.

மதுரை அவனியாபுரம் ஜல்லிகட்டு தொடர்பாக இருதரப்பினர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்திருந்தனர். இரு தரப்பு மனுக்களை விசாரித்த நீதிபதி ஜெக்தீஷ் சந்திரா, ஜல்லிக்கட்டினை அமைதியான முறையில் நடத்துவது தொடர்பான பரிந்துரைகளை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய இருதரப்பு வழக்கறிஞர்களுக்கும் உத்தரவிட்டார்.

மேலும் ஜல்லிக்கட்டு விழா குழுவின் தலைவராக மாவட்ட ஆட்சியரே செயல்பட்டு, ஜல்லிக்கட்டை நடத்தலாம் என தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of