“நீங்க முதல்ல இத பண்ணுங்க…!” – பிளாஸ்டிக் தடைக்கு தமிழக அரசுக்கு செக் வைத்த ஐகோர்ட்..!

571

ஆவின் பாலை பிளாஸ்டிக் கவருக்கு பதிலாக கண்ணாடி பாட்டில்களில் தர ஆலோசிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தமிழக அரசிற்கு அறிவுறுத்தியுள்ளது.

தமிழக அரசு கடந்த வருடம் பிளாஸ்டிக் தடைக்கான அறிவிப்பை வெளியிட்டு 2018 க்குள் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து 2019 ஆம் ஆண்டு முதல் முழுமையாக பிளாஸ்டிக் ஒழிக்கப்பட வேண்டும் எனவும் மீறினால் அபராதம் விதிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களின் மனுவை தள்ளுபடி செய்து தமிழக அரசின் அரசாணை செல்லும் என அறிவித்தது.

ஆவின் பாலை பிளாஸ்டிக் கவருக்கு பதிலாக கண்ணாடி பாட்டில்களில் தர ஆலோசிக்க வேண்டும். மருந்து, பால் அடைக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடை விதித்தால் தான் மாசடைவது தடுக்கப்படும் என தெரிவித்த நீதிபதி, கடும் அபராதம் விதிக்காவிட்டால் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை முழுமையாக இருக்காது என தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of