“அவ்னி புலி” கொன்றது அனில் அம்பானிக்காகவே – ராஜ் தாக்கரே குற்றச்சாட்டு

737

அனில் அம்பானியின் தொழில் பகுதியில் அச்சுறுத்தல் இருக்கக் கூடாது என்பதற்காகவே பெண் புலியை மகாராஷ்டிர அரசு சுட்டுக்கொன்றதாக ராஜ்தாக்கரே குற்றம் சாட்டியுள்ளார்.

மகாராஷ்டிரத்தின் யவத்மால் மாவட்டத்தில் 2 ஆண்டுகளில் 13பேரைக் கடித்துக் கொன்றதாகக் கூறி அவ்னி என்கிற பெண்புலியை நவம்பர் இரண்டாம் நாள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். இதற்கு மத்திய அமைச்சர் மேனகா காந்தி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

புலி சுற்றித் திரிந்த பகுதியில் அனில் அம்பானியின் தொழில் திட்டம் கொண்டுவரப்பட உள்ளதாகவும், அதைக் காப்பதற்கே புலி சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement