திருவல்லிக்கேணி – காவத்துறை சார்பில் நடத்தப்பட்ட காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு

88

அண்மை காலமாக பெண்களுக்கு எதிராக நாடகும் குற்றங்கள் அதிகமாகிக் கொண்டே வருகின்றது, இந்நிலையில் பெண்கள் தங்களை தற்காத்து கொள்ள என்ன என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் தங்களுக்கு கடுமையான சூழ்நிலை ஏற்படும்போது அதை அவர்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடைபெறுகிறது.

பெண்கள் இக்கட்டான சூழ்நிலைகளில் தாங்கள் இருக்கும் இடத்தை உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்க அண்மையில் ‘காவலன்’ என்ற செயலி வெளியானது. போலீசாரும் இந்த செயலி குறித்த விழிப்புணர்வினை எப்போதும் செய்துவருகின்றனர்.

இந்த செயலியை பயன்படுத்தி பல பெண்களுக்கு தக்க சமயத்தில் உதவியும் கிடைத்திருப்பது எல்லாரும் அறிந்ததே. இந்நிலையில் திருவல்லிக்கேணி கிழக்கு மண்டல காவத்துறை அதிகாரிகள் சார்பில் நடத்தப்பட்ட காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வானில் காவலன் செயலி குறித்த கருத்துக்கள் அடங்கிய வண்ண விளக்குகளையும் வெள்ளை நிற பலூன்களையும் பறக்கவிட்டனர்.

Kavalan-4

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of