துப்பாக்கிகள் பற்றி நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி.

96

நாகை மாவட்டம் மயிலாடுதுறை ரயில்வே இருப்புப் பாதை காவல் நிலையத்தில், பொதுமக்கள், போலீஸார் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக கூறைநாடு, கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, துப்பாக்கிகள் கையாளும் விதம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Nagai-Police-Station

ரயில்வே இருப்புப் பாதை காவல் நிலைய ஆய்வாளர் வி.எஸ்.சிவவடிவேல் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், பிஸ்டல், 380 ரிவால்வர், இன்சாஸ், கார்பன் மற்றும் 410 மஸ்கட் ரக துப்பாக்கிகளை கையாளும் விதம் குறித்து, சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், மாணவ, மாணவிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தார்.

மேலும், பொதுமக்களுக்கு, குறிப்பாக பெண்கள், முதியவர்களுக்கு எதிராக நடக்கும் குற்றச் சம்பவங்களை தடுத்து, பாதுகாப்பு ஏற்படுத்தும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள காவலன் எஸ்ஓஎஸ் செயலியை, ஆன்ட்ராய்டு செல்போனில் பதிவிறக்கம் செய்து, பயன்படுத்தும் முறை குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.