திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த விழிப்புணர்வு

347

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த விழிப்புணர்வு எற்படுத்தும் விதமாக 16 வகையான உலக சாதனை செய்யும் முயற்சியில் 9824 மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.திருவண்ணாமலையில் தேசிய இளைஞர் தினத்தை கொண்டாடும் விதமாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 16 அரசு பள்ளிகளில் மாணவர்கள் கலந்துகொண்ட, உலகிலேயே மிக அதிகமானவர்கள் நாற்காலியை வைத்துக் கொண்டு நடனம் ஆடுவது, பிதாகரஸ் தேற்றம், யோகாசனம் போன்ற16 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது.

இந்த உலக சாதனை முயற்சியில் 9 ஆயிரத்து 824 மாணவ மாணவிகள கலந்து கொண்டனர். இந்த நிகழ்வுகளை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி பார்வையிட்டு மாணவர்களை வாழ்த்தினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of