வெளியான அயிலான் பட அப்டேட்..! குஷியில் ரசிகர்கள்..!

1576

இன்று நேற்று நாளை திரைப்படத்தின் இயக்குநர் ரவிக்குமார் அடுத்ததாக இயக்கி வரும் திரைப்படம் அயிலான். சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு, ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

கடந்த 2018-ஆம் ஆண்டு, ஜுன் மாதமே தொடங்கப்பட்ட இந்த திரைப்படம், சில பிரச்சனைகளின் காரணமாக, முடிக்கப்படாமல் உள்ளது. இதற்கிடையே, இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டும், இந்த ஆண்டு சிவகார்த்திகேயன் பிறந்த நாள் அன்று வெளியானது.

அதோடு, எந்த வித அப்டேட்டும் வழங்காமல் படக்குழு இருந்த நிலையில், தற்போது தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் டுவீட் ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. அதில், அயிலான் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, இந்த படத்தின் குறிப்பிட்ட பாடல் ஒன்று, விரைவில் வெளியாகும் என்று தகவல் கசிந்துள்ளது. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள், பெரும் குஷியில் உள்ளனர்.

Advertisement