அயோத்தி வழக்கு – இன்று விசாரணைக்கு வருகிறது

146

அயோத்தி வழக்கு இன்று முதல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் தலைமையில் இந்த விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில், கடந்த 2010 ஆம் ஆண்டு அக். 1 ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிலத்தை 3 பிரிவுகளாக பிரித்து கொடுத்தது. இதில் நிர்மோகி அகோரா என்ற பிரிவிற்கு ஒரு பகுதியும்,முஸ்லிம்களுக்கு ஒரு பகுதியும், இந்துக்களுக்கு ஒரு பகுதியும் வழங்குவதாக அலாகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பையடுத்து மீண்டும் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தொடர்ந்து இந்த விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்றுமுதல் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடக்கவிருப்பதாக தெரிகிறது.