B.1.617′ எனும் உருமாறிய பெருந்தொற்று வைரசுடன் தொடர்பில்லை

737

B.1.617′ எனும் உருமாறிய பெருந்தொற்று வைரசுடன், இந்தியாவின் உருமாறிய பெருந்தொற்றை உலக சுகாதார நிறுவனம் தொடர்புபடுத்தவே இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

பெருந்தொற்றின் தோற்றம் தொடங்கி, அதில் ஏற்பட்டு வருகிற உரு மாற்றங்களை உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் கண்டறியப்பட்ட B.1.617 எனும் உருமாறிய வைரஸ், தற்போது 44 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இது கவலைதரக்கூடிய மாறுபாடு என்று உலக சுகாதார நிறுவனம் ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாக செய்திகள் வெளியாகின.

ஆனால் உலக சுகாதார நிறுவனம் ‘B.1.617’ உருமாறிய வைரஸ், இந்திய மாறுபாடு வைரஸ் என கூறவே இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்து உள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெருந்தொற்று வைரசின் ‘B.1.617’ மாறுபாட்டுடன், இந்திய மாறுபாடு என்ற வார்த்தையை  உலக சுகாதார நிறுவனம் தொடர்புபடுத்தவே இல்லை என்றும் இந்த விவகாரத்தில் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் இந்தியா என்ற சொல்லே பயன்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement