மோடியால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும்! பல்டி அடித்த பாபாராம்தேவ்!

329

பாரதிய ஜனதா மற்றும் பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்தவர் பாபா ராம்தேவ். ஆனால் கடந்த சில மாதங்களாக பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதிலிருந்து சற்று விலகியே இருந்தார்.

இந்நிலையில் மத்திய அமைச்சர் ராஜ்யவர்த்தன் ராத்தோர், ஜெய்ப்பூர் ஊரக மக்களவை தொகுதிக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இவருக்கு வாக்களிக்க ஆதரவாக பிரச்சாரம் செய்த பாபா ராம்தேவ், பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே நாட்டை பாதுகாக்க முடியும் என்று பேசினார்.

மேலும் பேசிய அவர் நாட்டின் பாதுகாவலரான மோடியை பாரத மாதாவின் பெருமை என்று கூறலாம். சில மாதங்களுக்கு முன் பாபா ராம்தேவிடம் மக்களவை தேர்தலின் போது பாரதிய ஜனதாவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வீர்களா என கேட்ட போது அதற்கு அவர் நான் ஏன் ஒரு கட்சியை மட்டும் ஆதரித்து பிரச்சாரம் செய்ய போகிறேன்.

நான் அரசியல் ரீதியாக விலகிவிட்டேன். நான் அனைத்துக் கட்சிகளுடனும் இருக்கிறேன் என்று பல பிரபலங்கள், தலைவர்கள் மற்றும் செல்வாக்கு கொண்டவர்கள் மிகுந்த கூட்டத்தில் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of