அந்தமான் கடலில் புயல் மையம் கொண்டுள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

1162

பபுக் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அந்தமான் கடலில் புயல் மையம் கொண்டுள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

தென் சீன கடலில் உருவான பபுக் புயல், தாய்லாந்து நாட்டை புரட்டிப் போட்டு கடும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த புயல் நேற்று ஒடிசா கடற்கரையை கடந்து அந்தமானை நோக்கி நகர்ந்து வருகிறது. பபுக் புயல் இன்று மாலை அந்தமான் கடலை கடக்குமென்றும்,  அப்போது மணிக்கு 70 முதல்  90 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனால் அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. புயல் காரணமாக கடலூர், தூத்துக்குடி, புதுச்சேரி உள்ளிட்ட துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து 50 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நேற்று முன்தினம் அந்தமான் சென்றுள்ளனர்.

 

 

Advertisement